விளையாட்டு

INDvsAUS : ஆஸி. நிர்ணயிக்கும் ஸ்கோரை எடுக்குமளவு இந்திய பேட்டிங் வலுவாக இருக்கிறதா? - ஒரு பார்வை!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு மாற்றாக லெக் ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாதான் இருப்பார்.

INDvsAUS : ஆஸி. நிர்ணயிக்கும் ஸ்கோரை எடுக்குமளவு இந்திய பேட்டிங் வலுவாக இருக்கிறதா? - ஒரு பார்வை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

விராட் கோலி நாடு திரும்பியது மட்டுமல்ல, முகமது ஷமி காயமடைந்திருப்பதும், இந்திய அணிக்குக் கொஞ்சம் பின்னடைவுதான். பிரதான பெளலர் இல்லாமல், இந்திய அணியால் மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், 20 விக்கெட்டுகளையும் எடுக்க முடியுமா? ஒருவேளை ஆஸியை ஆல் அவுட் செய்தாலும், அவர்கள் நிர்ணயிக்கும் ஸ்கோரை எடுக்குமளவு இந்திய பேட்டிங் வலுவாக இருக்கிறதா என பல கேள்விகள்...

சரி, ஷமிக்கு மாற்று யார்?

கிட்டத்தட்ட, லெக் ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாதான், ஷமிக்கு மாற்றாக இருப்பார். ஏனெனில், மெல்போர்ன் பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருக்காது. அதேபோல, ஸ்லோ பிட்ச்சாகவும் இருக்காது என்பதால், ஸ்பின் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்தியா அஷ்வின், ஜடேஜா என்ற இரு ஸ்பின்னர்களுடன் களமிறங்கலாம். கிட்டத்தட்ட, இது பிரதான பெளலர்களுடன் களமிறங்க வேண்டும் என்ற, பழைய டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்முலாதான். 2017–ம் ஆண்டு ரஹானே கேப்டன்சியில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த குல்தீப் யாதவ் என்ற லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்.

ஆனால், அவருடைய சமீபத்திய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. தவிர, மெல்போர்ன் பிட்ச்சும் அவருக்கு சாதகமாக இருக்காது. இன்னொரு விஷயம், பேட்டிங்கிலும் இவரை விட, ஜடேஜா பல மடங்கு சிறப்பானவர். ஃபீல்டிங்கிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடியவர் என்பதால், ரவீந்திர ஜடேஜாதான் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருப்பார்.

INDvsAUS : ஆஸி. நிர்ணயிக்கும் ஸ்கோரை எடுக்குமளவு இந்திய பேட்டிங் வலுவாக இருக்கிறதா? - ஒரு பார்வை!

ஷமி என்ற வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக இன்னொரு வேகப்பந்துவீச்சாளரைத்தானே களமறிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதுவும் சரிதான், முகமது சிராஜ், நவ்தீப் சைனி இருவரும் முழு உடற்தகுதியுடன் இருக்கின்றனர். முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், பயிற்சிப் போட்டியில் 3 விக்கெட் எடுத்து கம்பேக் கொடுத்தார் சைனி. வேகம் ப்ளஸ் பெளன்ஸ் அவரது பலம். மற்றொரு வீரரான முகமது சிராஜ், சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவர். ஒருவேளை மெல்போர்ன் பிட்ச் அதற்கு ஒத்துழைக்கும் என தெரியவரும் பட்சத்தில், வேகப்பந்துவீச்சாளருடன் களிமிறங்கலாம் என ரஹானே முடிவெடுத்து விட்டால், சைனி, சிராஜ் இருவரில் சிராஜுக்குத்தான் வாய்ப்பு அதிகம். சைனிக்கு பிரிஸ்பேன் ஆடுகளம் செட்டாகும்.

பேட்டிங்கில் என்ன மாற்றம் எதிர்பார்க்கலாம்?

ஓபனிங்கில் இருந்தே பிரச்னைதான். அடிலெய்டில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து எட்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார் ப்ரித்வி ஷா. அவருக்குப் பதிலாக அவரது சக அண்டர் 19 உலகக் கோப்பை டீம் மேட் சுப்மான் கில் களமிறங்கலாம். அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும், சமீபத்திய அவரது லிமிட்டெட் ஓவர் ஃபார்ம், டெஸ்ட் ஜெர்ஸி அணிய வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பயிற்சிப் போட்டியிலும் அரைசதம் அடித்து ஃபார்மில் இருக்கிறார்.

INDvsAUS : ஆஸி. நிர்ணயிக்கும் ஸ்கோரை எடுக்குமளவு இந்திய பேட்டிங் வலுவாக இருக்கிறதா? - ஒரு பார்வை!

மற்றொரு முக்கியமான மாற்றம். கோலிக்குப் பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்குவார். டெஸ்ட்டில் ஓபனராக ராகுலின் சமீபத்திய ஃபார்ம் சுமார் என்றாலும், புது பந்தில் கிரிஸில் நின்று பந்தை எதிர்கொள்வார் என்பதால், ராகுலை நம்பலாம். ப்ரித்வி அளவுக்கு டெக்னிக் மோசம் இருக்காது என்பது மட்டுமல்ல, ஆறு ஆண்டுகளுக்கு முன், இதே மெல்போர்னில் தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்திருக்கிறார் ராகுல். சென்டிமென்ட்டாகவும் அந்த மைதானம் அவருக்கு ராசியாக இருக்கும் என தெரிகிறது.

சஹாவுக்குப் பதில் பன்ட்

சஹா நல்ல வீக்கெட் கீப்பர். ஆனால், நல்ல பேட்ஸ்மேனா... அடிலெய்டில் 9, 4 என சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாகியிருக்கிறார். இதுமட்டுமல்ல, கடந்த 13 இன்னிங்ஸில் ஒரு அரைதசம் கூட அடிக்கவில்லை. இதுவே அவர் ஒரு பேட்ஸ்மேனாக எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என சொல்லும். சுழலுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஆடுகளங்களில், அவரது விக்கெட் கீப்பிங் அனுபவம் பலன் அளிக்கும். ஆனால், ஆஸியில்...? அதனால் பயிற்சிப் போட்டியில் சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ரிஷப் பன்ட் டிக் செய்யப்படலாம். கோலி அடிக்கடி பயன்படுத்தும் 'இன்டென்ட் இல்லை' என்ற குற்றச்சாட்டும், பன்ட் வந்தால் இருக்காது. ஸ்லெட்ஜிங், ஸ்டம்புக்கு பின்னாடி இருந்து உற்சாகம் அளிப்பது என, பன்ட் இந்திய அணிக்கு ரொம்பவே தேவைப்படுகிறார்.

banner

Related Stories

Related Stories