விளையாட்டு

“கோலி இல்லாத இந்திய அணியை மீட்க யாரும் இல்லை; மிகப்பெரிய சிக்கலில் இந்திய அணி” : ரிக்கி பாண்டிங் கருத்து!

“கோலி இல்லாத நிலையில், இதுபோன்ற தோல்விக்குப் பிறகு இந்திய அணியை மீட்க யாரும் இல்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

“கோலி இல்லாத இந்திய அணியை மீட்க யாரும் இல்லை; மிகப்பெரிய சிக்கலில் இந்திய அணி” : ரிக்கி பாண்டிங் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

கோலி இல்லாத இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஒய்ட்- வாஷ் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருப்பது அவர்களை உளவியல் ரீதியாகக் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றும், இரண்டாவது இன்னிங்ஸில் படுமோசமாக விளையாடி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இந்தப் போட்டியின்போது வர்ணனையாளராக இருந்த பான்டிங், போட்டிக்குப் பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வலைதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

"கோலி இல்லாத நிலையில், இதுபோன்ற தோல்விக்குப் பிறகு இந்திய அணியை மீட்க யாரும் இல்லை. அவர்கள் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது. அந்த மிடில் ஆர்டரில் ரிசப் பன்ட் நிச்சயம் இடம்பெறவேண்டும். கோலி இல்லாத நிலையில், அவர்களின் பேட்டிங்கை பலப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் நிச்சயம் பன்ட் அணியில் இருக்கவேண்டும்" என்று கூறினார் ரிக்கி பாண்டிங்.

“கோலி இல்லாத இந்திய அணியை மீட்க யாரும் இல்லை; மிகப்பெரிய சிக்கலில் இந்திய அணி” : ரிக்கி பாண்டிங் கருத்து!

"அணியில் மாற்றங்கள் கொண்டு வருவது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். ஆனால், உளவியில் ரீதியாக இந்திய அணியை மீட்பது மிகவும் அவசியம். அதீத நம்பிக்கையோடு இருக்கும் ஆஸ்திரேலிய அணியோடு போராடும் வகையில், இந்திய அணியின் மனபலத்தை அதிகரிக்கவேண்டும். ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்வதைவிட அதுதான் மிகவும் முக்கியம்"

"இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது. அது இன்னும் அதிகரிக்கும். இந்தியாவை ஒய்ட்-வாஷ் செய்ய ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மெல்போர்னில் ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம். அப்படியொரு முடிவு மட்டும் கிடைத்துவிட்டால் இந்தியாவுக்கு அது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்து வெற்றி பெறுவது மிகவும் கடினமாகிவிடும்" என்று கூறினார் ரிக்கி பாண்டிங்.

banner

Related Stories

Related Stories