விளையாட்டு

"எப்போதும் நீங்கள் வெற்றியாளர்களே" - CSK அணியினருக்கு சாக்‌ஷி தோனியின் உணர்வுப்பூர்வமான கவிதை!

மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்திய போதிலும், பிளேஆப் சுற்றுக்குள் செல்லாமல் முதல்முறையாக வெளியேறியுள்ளது.

"எப்போதும் நீங்கள் வெற்றியாளர்களே" - CSK அணியினருக்கு சாக்‌ஷி தோனியின் உணர்வுப்பூர்வமான கவிதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) வரலாற்றில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இந்த 2020 ஐ.பி.எல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்திற்கு முன்னதாக கடைசி இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்த்து வெற்றிகரமான வெற்றியைப் பதிவுசெய்தது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல் 2020 புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

ஐ.பி.எல் வரலாற்றில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளேஆஃப் இடத்தை இழந்துள்ளது.

இந்த ஐ.பி.எல் 2020-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்ததையடுத்து, தோனியின் மனைவியான சாக்‌ஷி தோனி அவரது இன்ஸ்டாகிராமில் இதயப்பூர்வமான கவிதை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

💛

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக இதயபூர்வமான கவிதையை தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் சாக்‌ஷி கூறியதாவது :

”இது வெறும் ஒரு விளையாட்டு மட்டுமே

சிலவற்றை நீங்கள் வெல்வீர்கள்; சிலவற்றை நீங்கள் இழப்பீர்கள்

பல வருடங்கள், மயக்கும் பல வெற்றிகளுக்கும் சில வேதனையான தோல்விகளுக்கும் சாட்சி!

வெற்றியைக் கொண்டாடுவதும், தேற்றால் மனம் உடைந்து போவதும் வழக்கம்!!

நீங்கள் அப்போது வெற்றியாளர்களாக இருந்தீர்கள், இப்போதும் நீங்கள் வெற்றியாளர்களாக தான் இருக்கிறீர்கள்!

”உண்மையான வீரர்கள் போராடப் பிறக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்”

இவ்வாறு தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது தோனியின் ரசிகர்கள் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories