விளையாட்டு

தனது வீட்டையே CSK அணியின் மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ள ‘வெறித்தன’ தோனி ரசிகர்! #DHONI_FAN

தோனியை கொண்டாடும் இந்த முயற்சிக்காக கிட்டத்தட்ட 1.5 லட்சம் செலவு செய்துள்ளாராம் இந்த வெறித்தனமான ரசிகர்.

தனது வீட்டையே CSK அணியின் மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ள ‘வெறித்தன’ தோனி ரசிகர்! #DHONI_FAN
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கிரிக்கெட் வீரர் தோனிக்கு இல்லாத ரசிகர்களா! எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவில் தோனிக்கு என்று மிக அதிகமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் இன்று வரை தோனியை மட்டுமே நம்பி உள்ளனர்.

அதேபோல் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் போல் தீவிரமான ரசிகர்கள் தோனிக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று சொல்லலாம்.

தனது வீட்டையே CSK அணியின் மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ள ‘வெறித்தன’ தோனி ரசிகர்! #DHONI_FAN
தனது வீட்டையே CSK அணியின் மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ள ‘வெறித்தன’ தோனி ரசிகர்! #DHONI_FAN

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்ற தீவிர தோனி ரசிகர், துபாயில் ஒரு ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தோனியின் மீது உள்ள அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துவதற்காக அவர் கட்டிய வீட்டு சுவரின் வெளிப்புறம் முழுவதிலும் தோனியின் படங்கள் வரைந்தும், வீடு முழுவதும் CSK அணியின் மஞ்சள் நிறத்தில் பெய்ன்ட் அடித்தும் அசத்தியுள்ளார். வீட்டின் முன்னால் #Home_of_dhoni_fan என்றும் எழுதியுள்ளார். இதற்காகவே கிட்டத்தட்ட 1.5 லட்சம் செலவு செய்துள்ளாராம் இந்த வெறித்தனமான ரசிகர்.

மேலும் அந்த வீட்டின் சுவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்ரேட்மார்க்கான ”விசில் போடு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து , ரசிகர் கோபிகிருஷ்ணன், ”அர்ப்பணிப்புணர்வுடன் விளையாடும் தோனிதான் எப்போதுமே கிரிக்கெட் உலகின் தல” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories