விளையாட்டு

ஐ.பி.எல் 2020 லீக் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் பலப்பரீட்சை! #IPL

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

ஐ.பி.எல் 2020 லீக் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் பலப்பரீட்சை! #IPL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நடைபெற உள்ளது. இதற்காக யு.ஏ.இ. சென்றுள்ள ஐ.பி.எல் அணிகளின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லீக் சுற்றுக்கான அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகக் குழு சற்று முன்னர் வெளியிட்டது. இதன்படி, 46 நாட்களில் 56 லீக் போட்டிகள் நடக்கின்றன.

துபாயில் 24, அபுதாபியில் 20, சார்ஜாவில் 12 லீக் போட்டிகள் நடக்கின்றன. பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகின்றன. ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் சூழலில் பிற்பகல் 3.30 க்கு ஒரு போட்டி துவங்குகிறது.

ஐ.பி.எல் 2020 லீக் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் பலப்பரீட்சை! #IPL

19ம் தேதி அபுதாபியில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல் 2020 லீக் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் பலப்பரீட்சை! #IPL

லீக் தவிர மற்ற சுற்று போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories