விளையாட்டு

“நாங்கள் மூன்று பேர்” : தந்தையாகும் செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்து விராட் கோலி மகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவருக்கும் குழந்தை பிறக்க இருப்பதாக விராட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மூன்று பேர்” : தந்தையாகும் செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்து விராட் கோலி மகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவருக்கும் குழந்தை பிறக்க இருப்பதாக விராட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பகிர்ந்துள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அந்த போஸ்டில் அனுஷ்கா சர்மா மேடிட்ட வயிற்றுடன் விராட் கோலியுடன் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் ”நாங்கள் மூன்று பேர். ஜனவரி 2021 வருகிறது.” என்று விராட் குறிப்பிட்டுள்ளார்.

அதே போஸ்டை அனுஷ்கா சர்மாவும் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவர் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விராட் கோலியை மணந்தார். அதிலிருந்து அவர் கர்ப்பமாக இருப்பதாக பலமுறை வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

கடந்த வருடம் நடந்த பிலிம் ஃபேர் விருது விழாவில் “ஆமாம். நீங்கள் திருமணம் செய்துகொண்டால் எல்லோரும் அவள் கர்ப்பமாக இருக்கிறாளா என்று கேட்பார்கள். இல்லாத ஒரு விஷயத்தை படிப்பதில் அவர்களுக்கு விருப்பம் உண்டு.” என அனுஷ்கா சர்மா இந்த வதந்திகள் பற்றி கூறினார்.

ஆனால் 2018 – ம் ஆண்டு ஸீரோ படம் வெளியான பின்பு அனுஷ்கா சர்மா எந்த புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காகத் துபாய் சென்றுள்ள கோலி அங்கு தனிமைப்படுத்தலில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories