விளையாட்டு

தமிழக வீரர் விஜய்சங்கருக்கு நிச்சயதார்த்தம் - இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து!

சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சிறிது காலத்திலேயே உலககோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழக வீரர் விஜய்சங்கருக்கு நிச்சயதார்த்தம் - இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சங்கர் அவருடைய எதிர்கால மனைவியுடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் வளர்ந்து வரும் ஆல் ரவுண்டராக உள்ளவர் விஜய் சங்கர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றார். இவர் சர்வதேச டி20 போட்டிகளில் 2018-ம் ஆண்டு இலங்கையின் கொழும்பில் நடந்த போட்டியில் அறிமுகமானார்.

இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை விஜய் சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய வருங்கால மனைவியான வைசாலி விஸ்வேஸ்வரனுடன் உள்ள இரண்டு புகைப்படங்களை விஜய் சங்கர் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

💍 PC - @ne_pictures_wedding

A post shared by Vijay Shankar (@vijay_41) on

அவருடைய அந்த பதிவுக்கு கே எல் ராகுல், யுஸ்வேந்திர சஹல் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கே எல் ராகுல் ‘வாழ்த்துகள் சகோதரா’ என்று கமெண்ட் செய்துள்ளார். அதே போல் யுஸ்வேந்திர சஹலும் வாழ்த்துகள் சகோதரா என்று கமெண்ட் செய்துள்ளார்.

கருண் நாயர், அபினவ் முகுந்த் மற்றும் ஜெயந்த் யாதவ் உள்ளிட்டோரும் விஜய் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது வரை இந்திய அணிக்காக விஜய் சங்கர் 12 ஒரு நாள் போட்டிகளிலும், 9 டி20போட்டிகளிலும் விளையாடியுள்ளார். செப்டம்பர் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாட உள்ளார்.

banner

Related Stories

Related Stories