விளையாட்டு

கொரோனா பாதிப்பு எதிரொலி : ஆன்லைனில் நடைபெறும் தேசிய விளையாட்டு விருது விழா - மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் ஆன்லைனில் அறிவிக்கப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எதிரொலி : ஆன்லைனில் நடைபெறும் தேசிய விளையாட்டு விருது விழா - மத்திய அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் அந்நாளில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான் சந்த் விருது போன்ற விருதுகள் குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு கொரோனா வைரஸ் அச்சத்தால், ஒட்டுமொத்த உலகமும் முடங்கிய சூழலில், விளையாட்டுத் துறையும் முடங்கியது. ஆகையால் நடப்பாண்டு தேசிய விருது பெறும் வீரர்கள் ஆன்லைன் மூலம் கவுரவிக்கப்படவுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு எதிரொலி : ஆன்லைனில் நடைபெறும் தேசிய விளையாட்டு விருது விழா - மத்திய அரசு அறிவிப்பு!

இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் வெளியான தகவலில், முதல் முறையாக தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது. கொரோனா அச்சத்தால் மத்திய அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், ஹாக்கி வீரர் சர்தார் சிங் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய தேர்வுக்குழு வரும் 17,18 ஆகிய தேதிகளில் கூடுகிறது. மேலும், விருது பெறும் வீரர், வீராங்கனைகள் பட்டியல் ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று காலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories