விளையாட்டு

“இந்த உலகம் சாதனைகளை பார்த்தது; நான் அந்த மனிதனை பார்த்தேன்”: தோனி ஓய்வு குறித்து சச்சின், கோலி உருக்கம்!

எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வை அறிவித்துள்ளதை அடுத்து சச்சின் மற்றும் கோலி உள்ளிட்டோர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

“இந்த உலகம் சாதனைகளை பார்த்தது; நான் அந்த மனிதனை பார்த்தேன்”: தோனி ஓய்வு குறித்து சச்சின், கோலி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள எம்.எஸ் தோனிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட்டுக்கு அனைத்து அங்கீகாரங்களையும் வென்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தோனியை பற்றிய அவர்களுடைய நினைவுகளையும், கருத்துகளையும் பகிர்ந்துவருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தோனி குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இந்திய கிரிக்கெட்டுக்கு உன்னுடைய பங்களிப்பு அளப்பரியது தோனி. 2011-ம் ஆண்டு உலககோப்பையை நாம் இணைந்து வென்றது என்னுடைய வாழ்வின் சிறந்த தருணங்கள். உனக்கும் உன் குடும்பத்துக்கும் உங்கள் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.” என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி, “ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஓருநாள் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொள்ளவேண்டும். ஆனாலும் நாங்கள் அருகிலிருந்து மிக நெருக்கமாக பார்த்த நபர் ஓய்வு பெறும்போது அது எங்களை உணர்வு வயப்படவைக்கிறது.

நீங்கள் இந்த நாட்டுக்கு செய்தவை அனைத்தும் அனைவரின் மனதிலும் இருக்கும். ஆனால் நமக்கிடையே பரஸ்பரமாக இருந்த மரியாதையும் உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த வெதுவெதுப்பும் என்னுடன் மட்டும் எப்போதும் இருக்கும். இந்த உலகம் சாதனைகளை பார்த்துள்ளது. ஆனால் நான் அந்த மனிதரைப் பார்த்தேன்” என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories