விளையாட்டு

IPL தொடருக்கு சீன நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய அனுமதி : இதில் மட்டும் இனிக்கிறதா சீனா உறவு ?

விவோ, பேடிஎம் போன்ற சீன நிறுவனங்கள் ஐ.பி.எல் தொருக்கு ஸ்பான்ஸர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

IPL தொடருக்கு சீன நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய அனுமதி : இதில் மட்டும் இனிக்கிறதா சீனா உறவு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

செப்டம்பரில் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு சீன நிறுவனங்கள் ஸ்பான்ஸராக இருப்பது சலசலப்பை உண்டு ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு எல்லாத்துறைகளைப் போல விளையாட்டுத்துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் கொரோனா தொற்று பயம் காரணமாக நடைபெறாமலேயே இருந்தன.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரும் கொரோனாவால் நடைபெறுமா என்ற கேள்வி இருந்த நிலையில், ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி துபாயில் தொடங்கும் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், அனுமதி கண்டிப்பாக கிடைத்துவிடும் என பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL தொடருக்கு சீன நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய அனுமதி : இதில் மட்டும் இனிக்கிறதா சீனா உறவு ?
PC

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்-க்கு பல்வேறு ஸ்பான்ஸர் நிறுவனங்கள் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் ஸ்பான்ஸர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த ஸ்பான்ஸர்களில் சீன நிறுவனமும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதலால் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் இருந்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்து உத்தரவிட்டது.

IPL தொடருக்கு சீன நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய அனுமதி : இதில் மட்டும் இனிக்கிறதா சீனா உறவு ?

மேலும் பா.ஜ.க ஆதரவாளர்களால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஸ்பான்ஸர் நிறுவனங்களில் விவோ (vivo) டைட்டில் ஸ்பான்ஸராகவும், பேடிஎம் (Paytm) நடுவர் ஸ்பான்ஸராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு நிறுவனங்களுமே சீன முதலீடுகளை கொண்டவை. மேலும் ஆன்லைன் பார்ட்னராக டீரீம் 11 நிறுவனமும், இணை ஸ்பான்ஸராக ஸ்விக்கியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டுமே சீன இணைய நிறுவனமான டென்ஸெட்டுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க ஊக்குவித்து வந்த நிலையில், தற்போது ஐ.பி.எல் தொடருக்கு மட்டும் சீன ஸ்பான்ஸர்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories