விளையாட்டு

30ஐ தாண்டி விட்டீர்கள்.. பார்வை திறனை கவனியுங்கள்.. விராட் கோலிக்கு கபில் தேவ் அட்வைஸ்!

ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் போது கண் பார்வை மங்கும். விராட் கோலி தனது பார்வை திறனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

30ஐ தாண்டி விட்டீர்கள்.. பார்வை திறனை கவனியுங்கள்.. விராட் கோலிக்கு கபில் தேவ் அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒயிட்வாஷ் ஆனது. அதேபோல, அணியின் கேப்டன் விராட் கோலியும் 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்சையும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும், 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்திருந்தார்.

கோலியின் இந்த மோசமான இன்னிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது. அனுபவ வீரர் ஒருவர் இவ்வளவு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் யாரும் எதிர்பாராத ஏமாற்றமாகவே அமைந்தது.

இந்நிலையில், கோலியின் ஆட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நேரத்தில், அவரது ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில், “கோலியின் பலம் எதுவாக பார்க்கப்பட்டதோ, அதுவே அவரது பலவீனமாக அமைந்துவிட்டது. இன் - ஸ்விங் பந்தில் கோலி தற்போது ரன் அடிக்க திணறியுள்ளார். இன்-ஸ்விங் பந்து வீச்சை சாதாரணமாக எதிர்கொள்ளும் கோலி, இவ்வாறு திணறுவது சரியல்ல.

ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் போது, அதாவது 30 வயதை கடக்கும் போது கண் பார்வை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஆகவே தனது கண்பார்வையை பற்றி கோலி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முந்தைய ஆட்டங்கள் போல விளையாட கோலி தனது கண் பார்வையை சரி செய்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்ட கபில்தேவ், அதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகும் எனவும், ஐபிஎல் தொடர் இதனை சரி செய்ய உதவும் எனவும் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories