விளையாட்டு

லஞ்ச புகாரில் சிக்கிய பாக். வீரர் : எல்லா போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பு - கிரிக்கெட் வாரியம் அதிரடி!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

லஞ்ச புகாரில் சிக்கிய பாக். வீரர் : எல்லா போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பு - கிரிக்கெட் வாரியம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான உமர் அக்மல் 2009ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், லஞ்ச புகார் அவர் மீது நிலுவையில் இருப்பதால், அந்த விசாரணை முடியும் வரை உமர் அக்மல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது குறித்து விரிவாக எதையும் விவரிக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய ஊழல் எதிர்ப்பு விதி 4.7.1ன் படி உமர் அக்மல் மீதான தடையை உடனடியாக அமல்படுத்த இருப்பதாகவும் விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் தொடர்பான எந்தவித நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

லஞ்ச புகாரில் சிக்கிய பாக். வீரர் : எல்லா போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பு - கிரிக்கெட் வாரியம் அதிரடி!

பிரபல பேட்ஸ்மேனான உமர் அக்மல், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அனைத்து வித போட்டிகளிலும் அவருக்கு தடை விதித்துள்ளதால், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

29 வயதான உமர் அக்மல் இறுதியாக பாகிஸ்தான் அணிக்காக 2019ம் ஆண்டு அக்டோபரில் நடந்த டி20 தொடரில் விளையாடினார். அதற்குப் பின் எவ்வித போட்டிகளிலும் விளையாடாத உமர் அக்மலுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது, அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மூன்று வித சர்வதேச போட்டிகளையும் சேர்த்து அக்மல் 5,887 ரன்கள் எடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories