விளையாட்டு

#INDVSWI ; இந்திய அணி அறிவிப்பு - நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த மூத்த வீரர்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது.

#INDVSWI ; இந்திய அணி அறிவிப்பு - நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த மூத்த வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடன் விளையாடி வருகிறது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் சில தேர்வுக்குழு உறுப்பினர் ஆகியோர் இருந்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது.

#INDVSWI ; இந்திய அணி அறிவிப்பு - நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த மூத்த வீரர்!

இந்தத் தொடரின் மூலம் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல, ஓய்வு கொடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றுள்ளார்.

T20 அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பண்ட், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், சிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன், க்ருனால் பாண்டியா, கலீல் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பண்ட், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், சிவம் துபே, ஜடேஜா, கேதார் ஜாதவ், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

#INDVSWI ; இந்திய அணி அறிவிப்பு - நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த மூத்த வீரர்!

வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் சிவம் துபே அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல, உலககோப்பைக்கு பிறகு கேதார் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

T20 போட்டிகள் :

  • மும்பை - டிசம்பர் 6ம் தேதி

  • திருவனந்தபுரம் - டிசம்பர் 8ம் தேதி

  • ஹைதராபாத் - டிசம்பர் 11ம் தேதி

ஒருநாள் போட்டிகள் :

  • சென்னை - டிசம்பர் 15ம் தேதி

  • விசாகப்பட்டினம் - டிசம்பர் 18ம் தேதி

  • கட்டாக் - டிசம்பர் 22ம் தேதி

banner

Related Stories

Related Stories