விளையாட்டு

பெரிய தப்பு பண்ணிட்டீங்க... பிரபல ஐ.பி.எல் அணி உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பிய யுவராஜ் சிங்!

கிறிஸ் லின்னை கொல்கத்தா அணி விடுவித்தது தவறான முடிவு என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பெரிய தப்பு பண்ணிட்டீங்க... பிரபல ஐ.பி.எல் அணி உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பிய யுவராஜ் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் 2020 சீசனை முன்னிட்டு, அணிகளுக்கு இடையிலான வீரா்களின் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐ.பி.எல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களை மாற்றியும், அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களையும் விடுவித்துள்ளன. அதில் சில முக்கிய வீரர்களும் அடங்குவர்.

அதன்படி கொல்கத்தா அணி கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, கார்லோஸ் பிராத்வெய்ட் உள்ளிட்ட வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை விடுவித்தது தவறான முடிவு என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பெரிய தப்பு பண்ணிட்டீங்க... பிரபல ஐ.பி.எல் அணி உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பிய யுவராஜ் சிங்!

அபுதாபியில் நடைபெற்று வரும் T10 லீக் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக கிறிஸ் லின் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், 30 பந்துகளில் 91 ரன்களை குவித்து அசத்தினார்.

இதன்மூலம் T10 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், ”கிறிஸ் லின் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பல போட்டிகளில் மிகச்சிறந்த துவக்கங்களை அளித்துள்ளார்.

ஆனால் அவரை கொல்கத்தா அணி ஏன் தக்கவைக்கவில்லை என தெரியவில்லை. இது தவறான முடிவு. இது குறித்து ஷாருக்கானுக்கு மெசேஜ் அனுப்பவுள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

பெரிய தப்பு பண்ணிட்டீங்க... பிரபல ஐ.பி.எல் அணி உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பிய யுவராஜ் சிங்!

மேலும் எதிர்கால திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த யுவராஜ் சிங், வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவில் பல்வேறு தொடர்கள் நடக்கவுள்ளது. அவற்றில் ஒருசில தொடர்களில் பங்கேற்க உள்ளேன்.

ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடாமல் ஆண்டுக்கு இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் விளையாட உள்ளேன். கிரிக்கெட்டை ரசித்து விளையாடிவிட்டு அதன் பிறகு பயிற்சியாளராக உள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories