விளையாட்டு

#INDVSSA :இந்திய அணி அபார வெற்றி - தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

#INDVSSA :இந்திய அணி அபார வெற்றி - தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோஹித் சர்மா 212 ரன்கள் குவித்தார். துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே 115 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

#INDVSSA :இந்திய அணி அபார வெற்றி - தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா!

இந்நிலையில், முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், லிண்டே 37 மற்றும் பவுமா 32 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அறிமுக வீரர் நதீம், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடியது. முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அந்த அணி 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

#INDVSSA :இந்திய அணி அபார வெற்றி - தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா!

ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்றே தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

3வது நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி போட்டி தொடங்கிய சிறிது நேரத்திற்குள் ஆல் அவுட்டானது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டி புருன் 30 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகவும் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

banner

Related Stories

Related Stories