விளையாட்டு

''நான் உன்னை காதலிக்கிறேன்'' மனம் திறந்த ஷேவாக் - யாரிடம் தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாகே இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

''நான் உன்னை காதலிக்கிறேன்'' மனம் திறந்த ஷேவாக் - யாரிடம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரேந்தர் சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையாகத்தான் ஆட வேண்டும் என்கிற பாணியை மாற்றியவர் சேவாக். இன்று அவருக்கு 41வது பிறந்தநாள்.

இதனையடுத்து சேவாக்கிற்கு ரசிகர்கள், முன்னாள்-இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி மன்னன் சேவாக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருந்தது.

அந்தப் பதிவில், T20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே T20 போட்டிகள் விளையாடிய மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கூறப்பட்டு இருந்தது. மேலும், அத்துடன் சென்னையில் சேவாக் 300 அடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டிருந்து.

அதற்கு நன்றி தெரிவித்து தமிழில் பதிவிட்ட சேவாக், ''ரொம்ப நாளாக உன்னை காதலிக்கிறேன். சென்னை மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார். இந்தப்பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, சென்னை அணியில் இடம்பெற்றிருந்த இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தமிழில் ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories