விளையாட்டு

IND VS SA : இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி.

IND VS SA :  இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கோலி அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்தார்.

பின்னர் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

IND VS SA :  இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

ப்ருவன், டெம்பா பவூமா, அன்ரிக் நொர்டியா ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டீகாக்கும், டுப்ளஸிஸும் நிதானமாக விளையாடினர். இவர்கள் இருவரையும் அஸ்வின் ஆட்டமிழக்க செய்தார். பின்னர் வந்த செனுரான் முத்துசாமி ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த மஹராஜ், பிலாண்டர் இருவரும் இந்திய அணியின் பவுலர்களுக்கு ஆட்டம் காட்டினர். அரைசதம் கடந்த மஹாராஜ் அஸ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த தொடர்ந்து வந்த ரபாடா, வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

IND VS SA :  இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியதால் இந்திய அணி ஃபாலோ ஆனை அமல்படுத்தியது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிரமும், டீன் எல்கரும் களமிறங்கினர். தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கத்திலியே அதிர்ச்சி காத்திருந்தது.

மார்க்ரம் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டு புருயின், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய டீன் எல்கர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பவுமா, பிலாண்டர் ஆகியோர் நிதானமாக விளையாடினாலும் அவர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக தென்னாப்பிரிக்க அணி 67.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்களும், அஷ்வின் 2 விக்கெட்டும், இஷாந்த், ஷமி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories