விளையாட்டு

ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஹா... இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் : வெற்றியைத் தொடருமா இந்தியா? #INDvsSA

நாளை நடைபெற உள்ள இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஹா... இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் : வெற்றியைத் தொடருமா இந்தியா? #INDvsSA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு என எல்லா வகையிலும் தென்னாப்ரிக்காவை வீழ்த்த இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், நாளைய போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறக்கப்படாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஹா... இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் : வெற்றியைத் தொடருமா இந்தியா? #INDvsSA

டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வுபெற்ற பிறகு விருத்திமான் சஹா கீப்பராக இருந்து வந்தார். அவருக்கு காயம் ஏற்பட்ட போது இந்திய அணி பார்த்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் என பலரையும் முயற்சி செய்து பார்த்தது. ஆனால், அதற்கு சிறப்பான பலன் கிட்டவில்லை.

பிறகு அந்த இடத்தில் ரிஷப் பண்ட்டை களமிறக்கிய முயற்சி வெற்றியடைந்தது. வரிசையாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என கலக்கினார். இதனால் இந்திய அணிக்கு நிரந்தர விக்கெட் கீப்பர் கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற தொடர்களில் ரிஷப் பண்ட் பெரிதாக சோபிக்கவில்லை.

அதேநேரத்தில் சாஹாவும் காயத்திலிருந்து மீண்டு வந்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சாஹா இருந்தும் பண்ட் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் பண்ட் பெரிதாக சோபிக்கவில்லை. தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்க்கு பதிலாக, சஹாவை களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஹா... இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் : வெற்றியைத் தொடருமா இந்தியா? #INDvsSA

இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, சஹா, இசாந்த் சர்மா, முகமது சமி.

இந்திய அணி 2013ம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் விளையாடிய 10 டெஸ்ட் தொடர்களிலும் வாகை சூடியுள்ளது. ஆகையால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அந்தச் சாதனையை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

banner

Related Stories

Related Stories