விளையாட்டு

காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து பும்ரா விலகல் : மாற்று வீரரை அறிவித்த பி.சி.சி.ஐ !

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து பும்ரா விலகல் : மாற்று வீரரை அறிவித்த பி.சி.சி.ஐ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகளவில் முன்னணி பவுலராக திகழ்பவர் பும்ரா. பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை முன்னாள், இந்நாள் வீரக்கல் பலர் புகழ்ந்து வருகின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருவதால் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படுகிறது.

இதனால் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடாமல் டெஸ்ட் தொடர்களில் மட்டும் பும்ரா விளையாடி வருகிறார். இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

banner

Related Stories

Related Stories