விளையாட்டு

இன்று ஓய்வு முடிவை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி? : கவலையில் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

இன்று ஓய்வு முடிவை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி? : கவலையில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

அதைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருந்தார். அப்போது இந்திய ராணுவத்தில் அவர் பயிற்சி பெற்றார். அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான T20 தொடரிலும் தோனி இடம்பெறவில்லை.

இந்நிலையில், தோனி இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தோனி தனது ஓய்வு குறித்து அறிவிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியிலிருந்து ஏற்கனவே ஒய்வுபெற்ற நிலையில் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற முடிவெடுத்துள்ளாரா என்ற கேள்விக்கு இன்று இரவு பதில் தெரியும்.

இன்று ஓய்வு முடிவை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி? : கவலையில் ரசிகர்கள்!

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் இதுபோல திடீரென செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று காலை தோனியை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தோனியுடன் விளையாடிய அந்த போட்டியை தன்னால் மறக்க முடியாது எனவும், அது ஒரு ஸ்பெஷல் நைட் எனவும் பதிவிட்டுள்ளார். அதோடு, தோனி தன்னை ஃபிட்னெஸ் டெஸ்ட் போன்று ஓட வைத்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தோனியின் ஓய்வு குறித்த அறிவிப்பை விராட்கோலி மறைமுகமாக குறிப்பிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தோனி ஓய்வுபெற வேண்டாம் என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories