விளையாட்டு

நான் திரும்ப திரும்ப சொல்றேன் இவரை விளையாட விடுங்க - சவுரவ் கங்குலி ஓபன் டாக்

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஜோடி சிறப்பானதாக இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

நான் திரும்ப திரும்ப சொல்றேன் இவரை விளையாட விடுங்க -  சவுரவ் கங்குலி ஓபன் டாக்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல பேட்டிங்கில், ரஹானே மற்றும் விஹாரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

அதேநேரத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் பதிலாக ரோஹித் சர்மா மற்றும் சஹா ஆகியோரை அணியில் சேர்க்கவேண்டும் என கோரிக்கைகள் இரண்டாம் போட்டியின் போதே எழுந்தன.

நான் திரும்ப திரும்ப சொல்றேன் இவரை விளையாட விடுங்க -  சவுரவ் கங்குலி ஓபன் டாக்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ”இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஜோடி சிறப்பானதாக இல்லை. மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடுகிறார். இன்னும் சில வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் கே.எல் ராகுலின் ஆட்டம் மிக சொதப்பலாக உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்போதும் அதையே சொல்கிறேன். ரோஹித்துக்கு டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ரஹானே மற்றும் விஹாரி சிறப்பாக விளையாடுவதால் நடுவரிசை குறித்து இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை.

நான் திரும்ப திரும்ப சொல்றேன் இவரை விளையாட விடுங்க -  சவுரவ் கங்குலி ஓபன் டாக்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு முன்னேறி, இன்று வந்திருக்கும் இடத்தை நாம் பாராட்டி ஆக வேண்டும். பும்ரா இன்னும் வேகப்பந்துவீச்சில் சில காலத்துக்கு ஆதிக்கம் செலுத்துவார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் எதிரணிக்கு அச்சுறுத்தலாகவே இருப்பார். தற்போது இருக்கும் பந்துவீச்சைக் கொண்டு வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பவுன்ஸ் தன்மை கொண்ட ஆடுகளத்திலும் இந்தியாவால் சாதிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்த மாத இறுதியில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories