விளையாட்டு

“வழங்கப்படும் வாய்ப்புகளை சரியாக ரிஷப் பண்ட் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ - சேவாக் அட்வைஸ் 

பண்ட் ஒரு திறமையான வீரர் தான், ஆனால் அவர் இன்னும் தம்மை மேம்படுத்த வேண்டியது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

“வழங்கப்படும் வாய்ப்புகளை சரியாக ரிஷப் பண்ட் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ - சேவாக் அட்வைஸ் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இளம் வீரரான ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சாஹாவுக்கு காயம் ஏற்பட்டதால், ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் காயத்திலிருந்து சஹா மீண்டுவந்த போதிலும் ரிஷப் பண்ட்டே முன்னணி கீப்பராக திகழ்ந்தார்.

ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு தோனியும் டெஸ்ட் போட்டிகளுக்கு பண்ட்டும் கீப்பராக திகழ்ந்து வந்தனர். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பேட்டிங்கில் பண்ட் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பண்ட் வீணடிப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பேசியுள்ளார். "பண்ட் ஒரு திறமையான வீரர். ஆனால் அவர் இன்னும் தம்மை மேம்படுத்த வேண்டியது அவசியம். இந்திய அணியில் பண்ட்டிற்கு இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை அவர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரை கணிப்பது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories