விளையாட்டு

இந்திய U-19 அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் நீக்கம்? - காரணம் என்ன?

இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய U-19 அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் நீக்கம்?  - காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய அணியின் சுவர் என செல்லமாக அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ஓய்விற்கு பின் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பயிற்சியாளராக இருந்த இந்த காலகட்டத்தில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றது. மேலும், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதால், அவர் வகித்துவந்த இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பி.சி.சி.ஐ தகவலின்படி, இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக சிதான்சு கோடக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக பராஸ் பாம்ரேயும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இவர்கள் இருவரும் அடுத்த சிலமாதங்களுக்கு மட்டும்தான் பதவியில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories