விளையாட்டு

செஞ்சுரியில் சாதனைகளை தனதாக்கிய விராட் கோலி : தொடரை வென்றது இந்தியா!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலியின் அபார சதத்தின் உதவியால், 6 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. 

செஞ்சுரியில் சாதனைகளை தனதாக்கிய விராட் கோலி : தொடரை வென்றது இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறைபடி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி 99 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.

செஞ்சுரியில் சாதனைகளை தனதாக்கிய விராட் கோலி : தொடரை வென்றது இந்தியா!

இதன்மூலம், விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 43வது சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.

கோலி இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளையும் தனதாக்கியுள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்துள்ளார் கோலி. சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 70 இன்னிங்ஸில் 9 சதம் அடித்துள்ளார். கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 35 இன்னிங்ஸில் 9 சதங்கள் அடித்துள்ளார்.

கோலி, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 21 சதங்கள் எடுத்துள்ளார். கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களில் ஆஸி-யின் ரிக்கி பாண்டிங் 22 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 220 இன்னிங்ஸில் கேப்டனாக செயல்பட்டு 22 சதமடித்துள்ளார். கோலி 76 இன்னிங்ஸிலேயே 21 சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories