விளையாட்டு

ஆஷஸ் போட்டியில் சிவப்பு தொப்பிகளுடன் ஆஸ்திரேலிய - இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கியது ஏன் தெரியுமா?

ஆஷஸ் போட்டியில் சிவப்பு  தொப்பிகளுடன் ஆஸ்திரேலிய - இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கியது ஏன் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 71-வது ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது நாளான இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் எப்போதும் இல்லாத வகையில், இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பி அணிந்து களமிறங்கினார்கள். வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியின் எண்களும் சிவப்பு நிறத்தில் இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நடத்தும் அறக்கட்டளை சார்பில், நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர் ஸ்ட்ராஸின் மனைவி ரூத், கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் காலமானர். அவரது நினைவாக 'ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை'-யை தொடங்கினார் ஸ்ட்ராஸ். இந்த அறக்கட்டளை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories