விளையாட்டு

சக வீரர் மீது கோலிக்கு இவ்வளவு பொறாமையா....! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

கோலியின் இந்தச் செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக வீரர் மீது கோலிக்கு இவ்வளவு பொறாமையா....! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

முதலில், பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தினால் அதிவேகமாக 100 வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பார்.இதனால் குல்தீப் யாதவ் நேற்றைய ஆட்டத்தின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதில் சாஹல் களமிறக்கப்பட்டார். கோலியின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் குல்தீப் விளையாடிருந்தால் அவர் அந்த சாதனையை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்திருக்கும். இதை அறிந்தும் கோலி, குல்தீப்க்கு வாய்ப்பு அளிக்கவில்லை. குல்தீப் யாதவ் படைக்கவிருந்த சாதனையைக் கோலி சதி செய்து தடுத்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன. இதன்காரணமாக, குல்தீப் யாதவ் இந்த சாதனையைப் படைக்க மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories