விளையாட்டு

சிக்கலில் ஷிகர் தவான் : தொடர் சொதப்பல் காரணமாக அணியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுகிறாரா ?

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பேட்டிங்கில் சொதப்பி வருவது அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சிக்கலில் ஷிகர் தவான் : தொடர் சொதப்பல் காரணமாக அணியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுகிறாரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில், 3வது ஒருநாள் ஆட்டம் நாளை போர்ட் ஆப் ஸ்பெய்னில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இருந்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் பயங்கரமாக சொதப்பி வருகிறார் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 1 ரன், இரண்டாவது ஆட்டத்தில் 23 ரன்கள், மூன்றாவது ஆட்டத்தில் 3 ரன்கள் என மோசமாகவே விளையாடினார் தவான்.

தொடர்ந்து, ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால், நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தவான். இதிலும் சோபிக்கவில்லை என்றால் அணிக்கு வெளியே அமரவைக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

சிக்கலில் ஷிகர் தவான் : தொடர் சொதப்பல் காரணமாக அணியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுகிறாரா ?

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பெரிய சிக்கலாக இருந்து வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சொதப்பி வருவது அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

நாளைய ஆட்டத்திலும், தொடர்ந்து நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணியில் தனது இருப்பைத் தக்கவைப்பார் என தவான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories