விளையாட்டு

நவ்தீப் சைனியின் கிரிக்கெட் வாழ்வைத் தடுக்க நினைத்தவர்கள் இவர்கள் தான் - கம்பீர் குற்றச்சாட்டு!

நவ்தீப் சைனியை தடுக்க நினைத்தவர்களின் மிடில் ஸ்டெம்ப் சாய்ந்து கிடக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நவ்தீப் சைனியின் கிரிக்கெட் வாழ்வைத் தடுக்க நினைத்தவர்கள் இவர்கள் தான் - கம்பீர் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய முதலாவது டி20 போட்டி புளோரிடாவில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுகமானார். நவ்தீப் சைனி வீசிய முதல் ஓவரிலியே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும், இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணியாக இருந்தார்.

இந்நிலையில் நவதீப் சைனியின் கிரிக்கெட் வாழ்வை முடக்க நினைத்தவர்களைக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ட்விட்டரில் சாடியுள்ளார். அதில், ''சைனி இந்தியாவிற்காக விளையாடியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் போட்டியில் பந்துவீசுவதற்கு முன்பே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளீர்கள். பிக்ஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சௌகான் ஆகியோரை வீழ்த்தியுள்ளீர்கள். நவ்தீப் சைனியை தடுக்க நினைத்தவர்களின் மிடில் ஸ்டெம்ப் சாய்ந்து கிடக்கிறது'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீச அழைக்கப்பட்ட நவ்தீப் சைனியின் வேகப் பந்துவீச்சை கண்ட கம்பீர் அவரை டெல்லி அணியில் சேர்ப்பதற்காக முயற்சித்துள்ளார். ஆனால், அவருக்கு டெல்லி அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அப்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த பிஷன் சிங் பேடி, துணைத் தலைவர் சேத்தன் சௌகான் ஆகியோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கம்பீர் நவ்தீப் சைனிக்காக அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் சைனிக்கு டெல்லி அணியில் இடம் கிடைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories