விளையாட்டு

ஓவர்த்ரோ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை - பர்னிச்சரை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆனது.

ஓவர்த்ரோ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை - பர்னிச்சரை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் டை ஆனதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்கே வெற்றி என்கிற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

ஓவர்த்ரோ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை - பர்னிச்சரை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது 50வது ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்டார். இரண்டாவது ரன் ஓடும் போது, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் பந்தை கீப்பரிடம் எறிந்தார். கப்தில் எறிந்த பந்து கிரீசுக்குள் நுழைய டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பந்து பவுண்டரிக்கு சென்றது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 + 4 என 6 ரன்கள் வழங்கப்பட்டன ( ஓடியதற்கு 2 ரன்கள் + பவுண்டரி 4 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓவர்த்ரோ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை - பர்னிச்சரை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன. அந்த ஓவர்த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்க ஆன்-பீல்ட் நடுவர்கள் முடிவு செய்தது தவறு என்று நடுவர் சைமன் டஃபெல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் சென்று ஓவர் த்ரோவில் கிடைந்த 4 ரன்களை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கேட்டதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த தகவலை பென் ஸ்டோக்ஸ் தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், "அந்த சம்பவத்திற்காக நான் வருந்தினேன். இதுகுறித்து நடுவர்களிடம் நான் ஏதும் சொல்லவில்லை. நான் டாம் லாதமிடம் மற்றும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு மட்டும் கேட்டேன்" என்றார். முன்னதாக ஆண்டர்சன் கூறியதை வைத்து cricket is a gentleman's game என்பதை நிரூபிக்கும் விதமாக பென் ஸ்டோக்ஸின் செயல் அமைந்ததாக கூறிவந்தவர்களுக்கு, ஸ்டோக்ஸின் இந்த பதில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories