விளையாட்டு

இங்கிலாந்தின் உலகக்கோப்பைக் கனவை நிறைவேற்றிய வெஸ்ட் இண்டீஸ்காரர் : யார் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்?

ஐரோப்பிய நாடுகளில் கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி உச்சத்தைக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. இப்போது, இங்கிலாந்துக்காரர்களின் நெடுநாளைய கனவை ஒரு கறுப்பினத்தவரே நிறைவு செய்து வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தின் உலகக்கோப்பைக் கனவை நிறைவேற்றிய வெஸ்ட் இண்டீஸ்காரர் : யார் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின.

நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரு அணிகளும் ஒரே ஸ்கோரை எட்டியதால், போட்டி 'டை' ஆனது. வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

'சூப்பர் ஓவரில்' நியூசிலாந்து சார்பில் போல்ட் பந்துவீசினார். பட்லர், ஸ்டோக்ஸ் கைகொடுக்க இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங் செய்தார். 16 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை எனும் நிலையில் 15 ரன்களோடு ஓவர் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த (சூப்பர் ஓவரையும் சேர்த்து 26) அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகளை மட்டுமே எடுத்திருந்தது.

இங்கிலாந்தின் உலகக்கோப்பைக் கனவை நிறைவேற்றிய வெஸ்ட் இண்டீஸ்காரர் : யார் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்?

சூப்பர் ஓவர் 'டை' ஆனால் அதிகம் பவுண்டரிகள் அடித்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது ஐசிசியின் விதி. இந்த விதியின் மூலம் ஐரோப்பிய நாடொன்று முதல் முறையாக கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது.

கடைசி ஓவரில் கூடுதல் ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்.

யார் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்?

இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்தவர். மேற்கிந்தியத் தீவில் குடியுரிமை கொண்ட இவர், உள்ளூர் அணிகளில் விளையாடி வந்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் நல்ல வீரர்களுக்கு ஆதரவளிக்காமல் புறக்கணித்து வருவது வாடிக்கை. இவரும் அங்கு புறக்கணிக்கப்பட்டார்.

மிகச் சிறப்பாக விளையாடியும் மேற்கிந்திய தீவுகள் அணியில் 19 உட்பட்டோருக்கான அணியில் நிரந்தர இடம்கிடைக்காத ஆர்ச்சர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றார். அதன்பின் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.

இங்கிலாந்தின் உலகக்கோப்பைக் கனவை நிறைவேற்றிய வெஸ்ட் இண்டீஸ்காரர் : யார் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்?

ஆனாலும் இங்கிலாந்து விதிப்படி அவர் 7 வருடம் உள்ளூர் அணிகளில் விளையாட வேண்டும். இதனால் உள்ளூர் போட்டியில் விளையாடி வந்தவருக்கு ஐபிஎல் மூலம் அடித்தது அதிர்ஷ்டம். ஐபிஎல் தொடருக்காக கடைசி நேரத்தில் தேர்வான இவரை ராஜஸ்தான் அணி 7.2 கோடி கொடுத்து எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்தால் சம்பளம் கொடுக்காமல் தவிக்கவிடப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததால் ரசிகர்கள், விமர்சகர்களின் கவனம் அவர் மீது பதிந்தது.

2018 ஐபிஎல் போட்டிகளில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டிருந்தாலும் ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் அவரை வெறுமனே உட்கார வைத்தது. மும்பைக்கு எதிராகத்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர். 4 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்தார். அதே போல் 2019 ஐபிஎல் சீசனிலும் அவரது ஆதிக்கம் தொடர்ந்தது.

இங்கிலாந்தின் உலகக்கோப்பைக் கனவை நிறைவேற்றிய வெஸ்ட் இண்டீஸ்காரர் : யார் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்?

இதனிடையே 2019 உலகக்கோப்பை அணிக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் முதலில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. பிறகு இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டபோது ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர், உலகக்கோப்பை அணியில் சேர்த்து கொள்ளப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நேற்று வரை உலகக்கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை எடுத்தார்.

இங்கிலாந்து அணியின் சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியும், மிகச் சிக்கனமாகப் பந்துவீசியும் இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ஐரோப்பிய நாடுகளில் கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி உச்சத்தைக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. இப்போது, இங்கிலாந்துக்காரர்களின் நெடுநாளைய கனவை ஒரு கறுப்பினத்தவரே நிறைவு செய்து வைத்திருக்கிறார். இங்கிலாந்து இப்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் எனும் கறுப்பினத்தைச் சேர்ந்த வீரரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories