விளையாட்டு

ஆல் 7 தோனி பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: தோனிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் யார்? யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் தல தோனி. இவர் தனது 38வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

ஆல் 7 தோனி பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: தோனிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் யார்? யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான வீரர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணி டி 20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகளில் முதலிடம் என இந்திய அணியை சிறப்பாக செயல்பட வைத்து இந்திய அணி உச்சிக்கு செல்ல ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.

இவர் உலகக் கோப்பை தொடரில் கடைசியில் சிக்ஸர் அடித்து இந்திய அணி கோப்பை வென்றது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மறக்க முடியாத விஷயம். இவரது அதிரடி ஆட்டமும், எவ்வளவு கடிமான சூழ்நிலையையும் நிதானமாக கையாலும் தோனியை ரசிகர்கள் '' கேப்டன் கூல் '' என்று செல்லமாக அழைப்பதுண்டு. இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

தோனிக்கு இன்று தனது 38வது பிறந்தநாள் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு அவரின் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐ.சி.சி : “ஒரு மனிதர் கோடிக்கணக்கான பாராட்டுகள், வாழ்க்கை முழுவதும் நினைவுகள், தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளது.

ரோஹித் சர்மா : “மஹி பாய் (தோனி அண்ணன்) கேக் எங்கே? பிறந்த நாள் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் சேவாக் : “உலகில் 7 கண்டங்கள், இசையில் 7 அடிப்படை ஸ்வரங்கள், உடலில் 7 சக்கரங்கள், வாரத்தில் 7 நாட்கள், திருமணத்தில் 7 கட்டங்கள், உலகில் 7 அதியசங்கள், 7வது மாதம், 7ம் தேதி இன்றும் கிரிக்கெட் உலகில் அதிசயம்தான். பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கேதார் ஜாதவ் : “மஹி (தோனி) பாய்க்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளையும், மகிழ்ச்சிசயையும் பெற வாழ்த்துகிறேன் கடவுள் ஆசிர்வதிப்பாராக..” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் : “வாழ்க்கையில் அனைத்து நலன்களையும், அன்பையும், வெற்றியையும் பெற தோனி பெற வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி” எனத் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவாண் : “தனக்கென கிரிக்கெட் அடையாளத்தை உருவாக்கிய தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா : “மஹி பாய்க்கு(தோனி அண்ணன்) என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு கற்றுக்கொள்ள அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்மாதிரி” எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் : “மஹி பாய்க்கு (தோனி அண்ணன்) என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு நண்பராகவும்,ஆசிரியராகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.

ஹர்பஜன் : “என் நண்பன், என் தலைவன், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல இப்பிடி சொல்லிட்டே போலாம். சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி தோனி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா! மக்களின் நிரந்தர சொந்தமே, உலக கோப்பை வென்று வா” எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி : “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய் (தோனி அண்ணன்). உங்களுடன் நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எனக்கு ஒரு பெரிய சகோதரராக இருந்தீர்கள், நான் முன்பு கூறியது போல், நீங்கள் எப்போதும் என் கேப்டனாக இருப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories