விளையாட்டு

உலகக் கோப்பை அணியில் இடமில்லை - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயுடு!

உலகக் கோப்பை அணியில் இடமில்லை - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயுடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. ஓய்வுக்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் மெயின் 15 வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு இடம் பெறவில்லை. அப்போது முதலே அதிருப்தியில் இருந்தார் ராயுடு. ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு ஆகியோர் ரிசர்வாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

காயம் காரணமாக ஷிக்கர் தவான் அணியில் இருந்து விலகிய நிலையில், ராயுடு சேர்க்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதே போல் விஜய் சங்கர் காயத்தால் வெளியேறிய போது, ரிசர்வில் மிச்சமிருக்கும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்தார் ராயுடு. பொறுத்து பொறுத்து பார்த்தும் அணியில் இடம் கிடைக்காததால், அதிருப்தியில் ஓய்வு அறிவித்திருக்கிறார் என்று யூகிக்கப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அவர் ஓய்வுக்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

ஐ.பி.எல் மூலம் அறிமுகமாகி, இந்திய அணியில் இடம் பிடித்த அம்பத்தி ராயுடு, 50 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். அதில் 3 சதங்களும், 10 அரை சதங்களும் அடங்கும்.

banner

Related Stories

Related Stories