விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்திய அணி !

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை 2019 : மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்திய அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதியாகிவிடும்.

இன்றைய போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்யாவிட்டால், இலங்கைக்கு எதிராக வரும் 6ம் தேதி நடக்க உள்ள கடைசி லீக் ஆட்டம் வாழ்வா? சாவா? ஆட்டமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், குல்தீப் - சாஹல் சுழல் கூட்டணி விக்கெட் வேட்டை நடத்தத் தவறியது. வங்கதேசத்துக்கு எதிராக பூம்ரா, ஷமி, புவனேஷ்வர், ஹர்திக் என 4 வேகங்களுடன் களமிறங்குவது நல்ல வியூகமாக இருக்கும். மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறலாம்.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட், லோகேஷ் ராகுல், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ்\தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி.

மோர்டசா தலைமையிலான வங்கதேச அணி மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. வங்கதேச அணி அரையிறுதிக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வங்கதேசம்: மஷ்ரபே மோர்டசா (கேப்டன்), லிட்டன் தாஸ் , மகமதுல்லா, மெகதி ஹசன் மிராஸ், முகமது சைபுதின்\ருபெல் உசேன், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), முஸ்டாபிசுர் ரகுமான், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்க்கார், தமிம் இக்பால்.

banner

Related Stories

Related Stories