விளையாட்டு

உலகக்கோப்பை போட்டியில் இருந்து விஜய்சங்கர் விலகல் : அணியில் இணையும் புதிய வீரர் யார் ?

நடப்பு உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வீரர் விஜய்சங்கர் விலகினார்.

உலகக்கோப்பை போட்டியில் இருந்து விஜய்சங்கர் விலகல் : அணியில் இணையும் புதிய வீரர் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் விலகி உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறந்த வகையில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விஜய்சங்கர். 3 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய விஜய்சங்கர் 58 ரன்களை எடுத்துள்ளார்.

இதனையடுத்து வலை பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கர் பந்தை எதிர்கொண்ட விஜய்சங்கருக்கு எதிர்பாராதவிதமாக கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய்சங்கர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் காலில் அடிப்பட்டதால் உலகக்கோப்பை போட்டியில் இருந்து தற்போது விஜய்சங்கர் விலகியதாக அறிவிப்பு வெளியானது.

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷிகர் தவானும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories