விளையாட்டு

நீல நிற சீருடையை அணிவதில் பெருமை - விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற சீருடையை அணிவதில் பெருமை கொள்வதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நீல நிற சீருடையை அணிவதில் பெருமை - விராட் கோலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு நீல நிறமே நிரந்தரம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஜெர்சி இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்திற்கு மட்டுமானதுதான். இந்த இந்த புதிய ஜெர்சிக்கு 10ல் 8 புள்ளிகள் தருகிறேன். ஏனென்றால், புதிய சீருடை அழகாக உள்ளது, எனக்கு இந்த வண்ணம் பிடித்துள்ளது. இது ஒரு நல்ல மாற்றம். ஒரு போட்டிக்கு ஆரஞ்சு நிற சீருடை அணிகிறோம்; இது நிரந்தரமாக இருக்காது என நினைக்கிறன்.

ஏனெனில், நீலம் தான் எங்களுடைய நிறம். நீல நிற இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதில் பெருமை கொள்கிறேன் என்றார். இத்தொடரில் இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தும் என நினைத்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி திணறுவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால், சூழ்நிலைகள் இங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து அணியும் வலுவானது. யாரும் யாரையும் வெல்ல முடியும் என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories