விளையாட்டு

இந்தியாவின் புதிய ஜெர்ஸியால் ஸ்விகிக்கு இலவச விளம்பரம் - நெட்டிசன்களின் மீம் கலாய்

இந்திய அணிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நிற ஆடையை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

இந்தியாவின் புதிய ஜெர்ஸியால் ஸ்விகிக்கு இலவச விளம்பரம் - நெட்டிசன்களின் மீம் கலாய்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை தனது 7வது ஆட்டத்தை இங்கிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது இந்திய அணி. சர்வதேச போட்டிகளில் களம் காணும் இரு அணிகளும் ஒரே நிற ஜெர்சியை அணியக்கூடாது என ஐ.சி.சி புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, நடப்பு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்நாட்டு வீரர்கள் ஜெர்சியை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. அதனால் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் நாளை களமிறங்கவுள்ளது. இதற்கான புதிய நிற உடையை ட்விட்டரில் வெளியிட்டது பி.சி.சிஐ.

இந்நிலையில், இந்திய அணியின் புதிய நிற ஜெர்சியை வைத்து நெட்டிசன்கள் வழக்கம்போல் கலாய்த்து வைரலாக்கி வருகின்றனர். பல்வேறு விதமான விளம்பரங்கள், பெட்ரோல் பங்க் சீருடை என இந்திய அணியின் ஜெர்சிக்கு மீம்ஸ்களை பதிவிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அவற்றில் சில மீம்ஸ்கள்:

இந்தியாவின் புதிய ஜெர்ஸியால் ஸ்விகிக்கு இலவச விளம்பரம் - நெட்டிசன்களின் மீம் கலாய்
இந்தியாவின் புதிய ஜெர்ஸியால் ஸ்விகிக்கு இலவச விளம்பரம் - நெட்டிசன்களின் மீம் கலாய்
banner

Related Stories

Related Stories