விளையாட்டு

ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி !

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐ.சி.சி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.

2019 உலகக்கோப்பை தொடரில் 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து இந்தியா ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நாளை (ஜுன் 27) மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது.

banner

Related Stories

Related Stories