விளையாட்டு

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட்,ரோகித் : நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் !

உலகக் கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற அட்டத்தில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட்,ரோகித் : நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக் கோப்பை தொடரின் மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த அட்டத்தில் இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அவற்றை கீழ் காணலாம்,

ரோகித் சர்மா நிகழ்த்திய சாதனைகள் !

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார்.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய இரண்டாவது இந்தியர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையே, ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இதற்குமுன், 2015 தொடரில் விராட் கோலி 107 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது.

ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மூன்று சிக்சர்களை விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா விளாசிய சிக்சர்கள் 358. இவருக்கு அடுத்தபடியாக 355 சிக்சர்களுடன் தோனி 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும், குறைந்த போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 24 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சினை பின்னுக்குத் தள்ளினார். சச்சின் 219-வது போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை, ரோகித் சர்மா தந்து 203-வது போட்டியிலேயே எட்டியுள்ளார்.

குறைந்த போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்கள் பட்டியல் இதோ:-

I142 ஹாசிம் அம்லா, அணி - தென்னாப்பிரிக்கா

161 விராட் கோலி, அணி - இந்தியா

192 டி-வில்லியர்ஸ் அணி - தென்னாப்பிரிக்கா

203 ரோகித் சர்மா, அணி - இந்தியா

219 சச்சின் டெண்டுல்கர், அணி - இந்தியா

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட்,ரோகித் : நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் !

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !

நேற்றைய ஆட்டத்தில் 57 ரன்களை கடந்த போது, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி 222 போட்டிகளில் 11,000 ரன்களை கடந்து கிரிகெட்டில் புதிய உலக சதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் வரை சச்சின் 276 போட்டிகளில் 11000 ரன்கள் எடுத்ததே இதுவரை உலக சதனையாக இருந்தது.

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட்,ரோகித் : நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் !

23 ஆண்டு சாதனை முறியடிப்பு !

ராகுல் மற்றும் ரோகித் ஜோடி இந்திய அணியின் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையை செய்துள்ளது. இதற்கு முன்னர் சச்சின் & நவ்ஜோத் சிங் ஜோடியானது 1996ம் வருடம் நடந்த உலகக்கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்ததே அதிகமாக இருந்தது அது தற்போது முறியடிக்கபட்டுள்ளது.

மேலும், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையும் இந்த இணை பெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் தவான் & கோலி இணைந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்த 129 ரன்களை, முறியடித்து முதல் இடத்தை பிடித்தது இன்றைய ஜோடி.

இந்தியாவிற்காக அதிக போட்டிகள் !

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று தோனி விளையாடியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட்டை முந்தி 2-வது இடம் பிடித்தார்.

இவருக்கு நேற்றைய ஆட்டம் 341-வது போட்டியாக அமைந்தது. மேலும், டோனி ஆசிய அணிக்காக 3 போட்டிகளில் விளைய்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில், 463 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட்,ரோகித் : நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் !

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீத வெற்றி!

உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய முந்தைய 6 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியிழும் இந்தியாவே வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியே சந்தித்ததில்லை என்ற சரித்திர சாதனை தொடருகிறது.

மேலும், 20 ஓவர் உலகக் கோப்பையில் மோதிய 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிப் பெற்றுள்ளது.20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி 100 சதவீதமாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் !

இந்திய அணி, நேற்று 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. இதுவே, உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய ஒன்பது ஒருநாள் போட்டிகளில் எட்டில் பாகிஸ்தான் அணி 300 ரன்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட்,ரோகித் : நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் !

முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர் !

புவனேஸ்வர் குமார் 3-வது ஓவர் பந்துவீசிய பொது தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். இதனால் மீதமுள்ள அவரது 2 பந்துகளை விஜய்சங்கர் வீசினார். தனது முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கை அவர் எல்.பி.டபிள்யூ செய்தார். இதன் மூலம் உலக கோப்பையில் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

சர்வதேச அளவில் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 4-வது வீரர் விஜய்சங்கர் ஆவார். இதற்கு முன்பு பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ், ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹார்வி மற்றும் முகமது யூசுப் ஆகியோர் உலக கோப்பையில் முதல் பந்தில் விக்கெட் எடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories