விளையாட்டு

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் யுவராஜ் சிங்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் யுவராஜ் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2000ம் ஆண்டில் கென்யாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானவர் யுவராஜ் சிங். பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணியாக இருந்தவர் யுவராஜ் சிங். இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலகத்தை உற்று நோக்க வைத்தார்.

2011 உலகக்கோப்பை தொடரின் போதே அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது, இருப்பினும் புற்றுநோயுடன் அத்தொடர் முழுவதும் விளையாடினார் யுவராஜ் சிங். உலகக் கோப்பைக்கு பிறகு ஒருவருடம் யுவராஜ் சிங் சிகிச்சை பெற்றார். இதனால் அவர் கிரிக்கெட் விளையாடவே முடியவில்லை. அதன்பின் முழுவதுமாக குணம் அடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். அவர் பயிற்சிக்கு திரும்பினாலும் கூட அவரால் பழைய யுவராஜ் சிங்காக திரும்ப முடியவில்லை.

கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாமல் யுவராஜ் சிங் திணறி வந்தார். மோசமாக ஆடினார் அவர் எடுக்கப்பட்ட டி-20 உலகக் கோப்பை போட்டியில் மிக மோசமாக ஆடினார். யுவராஜ் சிங் கடைசியாக 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார், அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடவில்லை

ஐ.பி.எல் தொடரிலும் பெரிதாக விளையாடவில்லை யுவராஜ் சிங். இதனால் தொடர்ந்து இவர் ஐ.பி.எல் அணிகளால் புறக்கணிக்கப்பட்டார். எல்லா வருடமும் இவர் ஐ.பி.எல் அணி மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு மும்பை அணிக்காக நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடினார் மற்ற போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் சர்வதேச போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுடன் ஐ.பி.எல்.லிருந்தும் விடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories