விளையாட்டு

INDvAUS: ஸ்மித்துக்கு ஆதரவு தந்த கோலி; விமர்சகர்களின் வாயடைத்த நெகிழ்ச்சித் சம்பவம்-வீடியோ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றியை விட, தோனியின் சூப்பர் ஃபார்ம் சிக்சர் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

INDvAUS: ஸ்மித்துக்கு ஆதரவு தந்த கோலி; விமர்சகர்களின் வாயடைத்த நெகிழ்ச்சித் சம்பவம்-வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

INDvAUS: ஸ்மித்துக்கு ஆதரவு தந்த கோலி; விமர்சகர்களின் வாயடைத்த நெகிழ்ச்சித் சம்பவம்-வீடியோ

தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய தவான், ரோகித் இணை சதம் கடந்த பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. இதன் மூலம் ரோகித், தவான் இணை ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஜோடியாக 17வது சதத்தை கடந்து உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில், அரை சதம் கடந்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை தாண்டிய வீரர் என்ற பெருமையையும் ஹிட்மேன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

INDvAUS: ஸ்மித்துக்கு ஆதரவு தந்த கோலி; விமர்சகர்களின் வாயடைத்த நெகிழ்ச்சித் சம்பவம்-வீடியோ

இந்திய கேப்டன் விராட் கோலி அதிரடி காட்டி 82 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கோலி 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். மேலும், குறைந்த இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் ரன்மிஷின் விராட் கோலி பெற்றுள்ளார்.

ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் ஆக பார்க்கப்படும் தோனியும் வழக்கம்போல், தன் பங்குக்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தோனி அடித்த சிக்சரை பார்த்து வாயை பிளந்து மெய்மறந்த கோலி, தானும் தோனியின் ரசிகன்தான் என்பதை மைதானத்தில் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திய நிகழ்வு நேற்றைய போட்டியின் சிறந்த தருணமாக கருதப்பட்டது. தன் மீதான விமர்சனங்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கும் தோனி, அதனை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சிறந்த ஸ்கோராக நேற்றைய போட்டி பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பேட்டிங் செய்யும்போது மைதானத்தில் சுற்றி இருந்த ரசிகர்கள் அவரை பார்த்து கிண்டல் அடித்தனர்.

இதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிண்டல் அடிக்காதீர்கள், அவரை உற்சாகப்படுத்துங்கள் என கூறியது ரசிகர்களை மட்டுமல்லாது சக வீரர்களையும் நெகிழ வைத்ததுள்ளது.

banner

Related Stories

Related Stories