விளையாட்டு

இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசுவார்கள்-ரவி சாஸ்திரி புகழாரம் !

இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள் என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசுவார்கள்-ரவி சாஸ்திரி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது," உலகக்கோப்பை தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பங்கு மிகப்பெரியது. 50 ஓவர் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. அவரின் சின்ன சின்ன செயல்பாடு கூட போட்டியின் போக்கை மாற்றிவிடும். உலகக்கோப்பை மிகப்பெரிய சவாலான தொடர் தான். ஆனால் இந்திய அணி வீரர்கள் தங்களின் இயல்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலே, உலகக்கோப்பை நம் நாட்டில் இருக்கும். இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள். இத்தொடருக்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்' என்றார்.

banner

Related Stories

Related Stories