விளையாட்டு

IPL 2019 : நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் !

ஹைதராபாத்-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி.

IPL 2019 : நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்லனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டி காக்கும், ரோஹித் சர்மாவும் நிதானமாக ரன்களைச் சேர்ந்தனர். மும்பை அணி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டி காக்கும், ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அப்போது, டீகாக் 29 ரன்களும், ரோஹித் சர்மா 15 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதனையடுத்து, மும்பை அணியின் ரன் ரேட் வேகமாக குறைந்தது. அடுத்ததாக, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும், இஷான் கிஷன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சனும், டூபிளிஸிஸும் களமிறங்கினர். வாட்சனும், டூபிளிஸிஸும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த குர்ணால் பாண்டியா பந்தில் டூபிளிஸிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பதி ராயுடு, 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மறுபுறம், வாட்சன் நிதானமாக ஆடி வந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த பிராவோ நிதானமாக ஆடினார். 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிராவோவும் ஆட்டமிழந்தார்.கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.அந்த ஓவரை லசித் மலிங்கா வீசினார்.கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது,அனால் அந்த பந்தில் தாக்குர் அவுட்டானார். இதன்மூலம் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் 4வது முறையாக மகுடம் சூடி மும்பை அணி புதிய சாதனை.

banner

Related Stories

Related Stories