விளையாட்டு

மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்புமா சென்னை அணி 

இன்று (06.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்புமா சென்னை அணி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் கடந்த 2008 முதல் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23அம தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது.இன்று (06.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்துள்ளது. எனவே சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.அம்பாத்தி ராயுடு தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். எனவே அணி நிர்வாகம் இவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அல்லது டுயுபிளஸ்ஸி களமிறக்க திட்டமிடும்.

மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்புமா சென்னை அணி 

டுவைன் பிரவோவிற்கு காயம் காரணமாக இரு வாரங்களுக்கு ஓய்வழிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பு இம்ரான் தாஹீருக்கு மேலும் அதிகரித்துள்ளது. இம்ரான் தாஹீர் மற்றும் தீபக் சகார் பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர்களாக திகழ்கின்றனர். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானது என்பதால் கேப்டன் தோனி , ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஆடும் லெவனில் சேர்ப்பார்.

உத்தேச அணி ; அம்பாத்தி ராயுடு/டூபிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், தீபக் சகார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ஷர்துல் தாகூர்/மொஹித் சர்மா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது‌. 4 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக களமிறங்கவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் களமிறங்குவது சந்தேகத்திலே உள்ளது.கிறிஸ் கெய்ல் அணியில் இடம்பெறாததால் கே.எல்.ராகுலுக்கு பேட்டிங்கில் நிலைத்து விளையாடும் பொறுப்பு அதிகரித்துள்ளது.

மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்புமா சென்னை அணி 

மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த போட்டியில் சற்று தடுமாறிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் கர்ரான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆல்-ரவுண்டரான இவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் கடும் நெருக்கடியை அளிப்பார்.முகமது ஷமி(5 விக்கெட்டுகள்) மற்றும் ஹர்துஸ் வில்ஜியோன் (4 விக்கெட்டுகள்) ஆகியோர் பவர் பிளேவில் துருப்பு சீட்டாக உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் முருகன் அஸ்வின் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழல் சற்று பிரம்மாண்டமாகவே இருக்கும்.

உத்தேச அணி ; கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் கர்ரான், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி, முஜிப் யுர் ரகுமான்.

banner

Related Stories

Related Stories