விளையாட்டு

ஐ.பி.எல் 2019;கடைசி பந்தில் மும்பை திரில் வெற்றி 

ஐ.பி.எல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் மும்பை அணியம் மோதின.டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது.

ஐ.பி.எல் 2019;கடைசி பந்தில் மும்பை திரில் வெற்றி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் மும்பை அணியம் மோதின.டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டீகாக் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்த்து சைனி, உமேஷ், சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். பவர்-ப்ளேயில் 52 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.

7-வது ஓவரை சாஹல் வீசியபோது முதல் விக்கெட்டை இழந்தது மும்பை அணி. க்ளீன் போல்டாகிய டீகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யாதவ், ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை கூட்டினர்.உமேஷ்யாதவ் வீசிய 11-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் (8பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்து வெளியேறினார். அடுத்து யுவராஜ் சிங் களமிறங்கினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது

மொயின் அலி வீசிய 13-வது ஓவரில் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தார். சாஹல் வீசிய 14-வது ஓவரில் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதனால், மீண்டும் 6 சிக்ஸர்களை அடிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸருக்கு யுவராஜ் சிங் முயற்சித்த நிலையில் சிராஜிடம் பவுண்டரியில் கேட்சானது. யுவராஜ் சிங் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பொலார்ட் களமிறங்கினார்.

நிதானமாக பேட் செய்து வந்த யாதவ் 38 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹலின் 16—வது ஓவரின் கடைசிப் பந்தில் பொலார்ட் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அதை ஹெட்மயர் லாவகமகப் பிடித்தார். பொலார்ட் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். உமேஷ் யாதவ் வீசிய 17-வது ஓவரில் பாண்டியா சைனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.மார்கண்டே வந்து ஹர்திக்குடன் இணைந்தார்.

ஐ.பி.எல் 2019;கடைசி பந்தில் மும்பை திரில் வெற்றி 

கடைசி 2 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்து சிக்ஸர், பவும்டரி விளாச மீண்டும் ரன்ரேட் உயரத் தொடங்கியது. சிராஜ் வீசிய கடைசி ஓவரில் மார்கண்டே 6 ரன்களில் விக்கெட் கீப்பர் பர்தீப் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகள் அடங்கும். 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 187 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், உமேஷ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பர்தீவ் படேல், மொயின் அலி களமிறங்கினர். மெக்லனஹன் வீசிய 3-வது ஓவரில் படேல் ஒரு பவுண்டரி விளாச, மொயின் அலி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து சிதறடித்தார்.ரன்வேகத்தை கட்டுப்படுத்த பும்ரா வரவழைக்கப்பட்டார். 2-வது பந்தில் மொயின் அலி 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த விராட் கோலி, வந்தவேகத்தில் பும்ரா ஓவரில் “ஹாட்ரிக் பவுண்டரி” விளாசி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

மார்கண்டே வீசிய 7-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்தீவ் கடைசி பந்தில் போல்டாகி 31 ரன்களில்(ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.அடுத்து டிவில்லியர்ஸ் வந்து கோலியுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர். மார்கண்டே வீசிய 11-வது ஓவரில் கோலி பவுண்டரியும், டிவில்லியர்ஸ் சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தனர். ஓவருக்கு 10 ரன்கள் என்ற நிலையில் சென்றது.14-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இருந்துதான் திருப்புமுன ஏற்பட்டது.

ஐ.பி.எல் 2019;கடைசி பந்தில் மும்பை திரில் வெற்றி 

கோலி 46 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்விக்கெட் திசையில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் 49 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஹெட்மயர் களமிறங்கி, டிவில்லியர்ஸுடன் இணைந்தார். அதன்பின் டிவில்லியர்ஸ் அதிரடியில் இறங்கினார்.ஹர்திக் பாண்டியா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரிகளும்,மல்லிங்கா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள்,ஒருபவுண்டரியும் விளாசி டிவில்லியர்ஸ் வானவேடிக்கை நிகழ்த்தினார்.மீண்டும் பும்ரா வந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 5 ரன்களில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.இந்த ஓவரிலும் ரன்களை வழங்காமல் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

ஐ.பி.எல் 2019;கடைசி பந்தில் மும்பை திரில் வெற்றி 

18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச, டிவில்லியர்ஸ் அதை நொறுக்கி எடுத்தார். மீண்டும் ஒருபவுண்டரி, 2 சிக்ஸர்களை டிவில்லியர்ஸ் விளாசினார்.19-வது ஓவரை பும்ரா வீச வந்தபோது, கிராண்ட் ஹோம் விக்கெட்டை வீழ்த்தினார். துபே களமிறங்கினார். இந்த ஓவரில் ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியாக பும்ரா பந்துவீசினார். டிவில்லியர்ஸும் ரன் சேர்க்க திணறினார். பும்ரா கடைசியாக வீசிய 3 ஓவரிலும் தலா ஒரு விக்கெட்டையும், 8 ரன்களையும் மட்டுமே விட்டுக்கொடுத்தார்

கடைசி ஓவரை மலிங்கா வீசினார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட துபே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 2-வது பந்து முதல் 5-வது பந்துவரை சிங்கல் ரன்கள் எடுக்க 10 ரன்கள் கிடைத்தது. மல்லிங்கா தனது அனுபவமான பந்துவீ்ச்சில் ஷாட்களை அடிக்கவிடாமல் ஸ்விங்குகளையும், யார்கர்களைும் வீசி திணறடித்தார்.கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டிரா, அல்லது தோல்வி என்ற நிலையில் இருந்தது.

ஐ.பி.எல் 2019;கடைசி பந்தில் மும்பை திரில் வெற்றி 

மலிங்கா வீசிய கடைசி பந்தில் ரன்ஏதும் அடிக்கமுடியாததால், பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆனால், மல்லிங்கா தனது கடைசி பந்தை கரீஸை விட்டு வெளியே சென்று வீசி நோபாலாக வீசி இருந்தார். இதை நடுவர் பார்த்தும் இதற்கு மூன்றாவது நடுவருக்கு கேட்கவில்லை. நோபால் என்பது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தும் அதை நடுவர் அறிவிக்காததால், பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.ஒருவேளை நோபால் அறிவிக்கப்பட்டு, ப்ரீஹிட் வழங்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்களுடனும்(41பந்துகள், 6 சிக்ஸர், 4பவுண்டரி) துபே 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

banner

Related Stories

Related Stories