விளையாட்டு

வான்கடே மைதானம்,2011 உலகக்கோப்பையை நினைவூட்டுகிறது - யுவராஜ் சிங் 

வான்கடே மைதானத்தில் நுழையும்போது 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவுக்கு வருகிறது என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக கூறினார்.

yuvraj singh
google yuvraj singh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் தொடர் தொடங்க இருப்பதால், அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி, வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

வான்கடே மைதானத்திற்கு இன்று பயிற்சி செய்ய வந்த மும்மை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவுக்கு வருவதாக கூறினார்.“2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நினைவுக்கு வருகிறது. இந்த மைதானத்துக்குள் நுழையும்போது அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. இது எனது மறைக்க முடியாத சிறந்த நினைவுகள்” என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

2011-ல் வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.மேலும்,2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories