அரசியல்

த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

“5 நிமிடங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றினேன் என சொன்னவரை, இடைத்தேர்தலுக்காக 5 நாட்கள் தெருத்தெருவாக வர வைத்த இயக்கமாக தி.மு.க விளங்குகிறது.”

த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் பருவ மழையின் தீவிர அபாயங்களை அலட்சியப்படுத்தி, மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்கும் த.வெ.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து சென்னையில் தி.மு.க சார்பில் இன்று (அக்.15) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

இதில் தி.மு.க அரசு சார்பில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை விளக்கியும், மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை விவரித்தும்; த.வெ.க அரசின் தன்னிச்சையான தோல்வி நிர்வாகத்தை சுட்டிக்காட்டியும் தி.மு.க நிர்வாகிகள் உரையாற்றினர்.

த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

அப்போது ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, “தமிழ்நாட்டில் இத்தனை நாட்கள் உறங்கிக்கொண்டிருந்த த.வெ.க அரசு, தி.மு.க ஆர்ப்பாட்டம் என்றவுடன் விழித்திருக்கிறது.

5 நிமிடங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றினேன் என சொன்னவரை, இடைத்தேர்தலுக்காக 5 நாட்கள் தெருத்தெருவாக வர வைத்த இயக்கமாக தி.மு.க விளங்குகிறது.

தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டு ஜூன் 12-ஆம் தேதியும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது, காவிரி பாய்ந்து வந்தது, கடை மடை வரை தண்ணீர் சென்று சேர்ந்தது, விவசாயம் செழித்தது. ஆனால், இப்போது மேட்டூரிலும் தண்ணீர் இல்லை, காவிரியிலும் தண்ணீர் இல்லை.

அதே நிலைதான் சென்னையிலும். தி.மு.க ஆட்சியில் செழிப்பாக இருந்த சென்னை மாநகரம், இப்போது பல நிர்வாக சீர்கேடுகளை சந்தித்து வருகிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories