அரசியல்

மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!

“எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் செல்வாக்கு இல்லை. முதலமைச்சர் செல்வாக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் அதிக அளவு உள்ளது.”

மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல், வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்துவரும் அதே வேளையில், பிரச்சாரங்களை தொடங்கவும் தேர்தல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சுரேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது. பெண்களுக்காக தி.மு.க அரசு செயல்படுத்திய திட்டங்கள், மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!

சுமார் 60 விழுக்காடுக்கும் மேலான பெண்களின் வாக்கு தி.மு.க.விற்கு உள்ளது. கள நிலவரப்படி, தி.மு.க கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் செல்வாக்கு இல்லை. முதலமைச்சர் செல்வாக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் அதிக அளவு உள்ளது.

மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கு இடையில் தான் போட்டி நடைபெறுகிறது. நடிகர் விஜய் கட்சி களத்திலேயே இல்லை. அந்த கட்சி ஒரு மாய உலகில் உள்ளது. நடிகர் விஜய்யும் வெற்றி பெற வாய்ப்பில்லை, இரண்டாம் இடம் பிடிக்க வேண்டுமானால் வாய்ப்புள்ளது.

மேற்கு மண்டலத்தின் 37-ல் 35 தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெறும். தென் மண்டலத்தின் 42 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும். மாநில அளவில் சுமார் 45 விழுக்காடு வாக்கு பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.”

banner

Related Stories

Related Stories