அரசியல்

தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?

திருப்பூர் மாவட்டத்தில் டிச.29 திங்கட்கிழமை அன்று கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” - திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது என தலைமைக் கழகம் அறிவிப்பு.

தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 29.12.2025 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முதலமைச்சர் , கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட, கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” எனும் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கழக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,

1.31 லட்சம் மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட - கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அவர்கள் தலைமையில்;

கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலையில் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்பில்;

தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?

வருகிற 29.12.2025 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டினை அமைச்சர் பெருமக்களான சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.இராமச்சந்திரன் - மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன்;

கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., கே.எஸ்.மூர்த்தி, - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈஸ்வரசாமி, எம்.பி., இ.பிரகாஷ், எம்.பி., கணபதி ப.இராஜ்குமார், எம்.பி., - சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பெ.இராமலிங்கம், எம்.எல்.ஏ., ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ., க.சிவகாமசுந்தரி, எம்.எல்.ஏ., இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள்.

நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.

banner

Related Stories

Related Stories