இந்தியா

தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!

இந்திய காப்பீட்டுத்துறைக்கு எதிராக இருப்பதால், காப்பீட்டு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவையில் 'சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) மசோதா, 2025 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்தனர்.

தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இந்த திருத்தத்துக்கு எதிராக பேசியதாவது:-

மசோதாவின் பிரிவு 2 சி-ஐ திருத்துவது, இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குவதாகும். இது தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பு விதிகளின் மீறலாகும். மசோதாவின் பிரிவு 2 சி.ஏ.-ல் உள்ள உட்பிரிவுகள் ஏ மற்றும் பி-ஐச் சேர்ப்பது தேசிய காப்பீட்டு நிறுவனங்களின் நலன்களுக்கு எதிரானது.

ஏனெனில் (ஏ) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-இன் விதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிதிச்சேவை மையங்கள் உள்பட எந்தவொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் உள்ள ஒரு காப்பீட்டாளர் அல்லது காப்பீட்டு இடைத்தரகருக்கு இது பொருந்தாது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-இன் விதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிதிச்சேவை மையங்கள் உள்பட எந்தவொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் உள்ள காப்பீட்டாளர் அல்லது காப்பீட்டு இடைத்தரகருக்கு, அறிவிப்பில் குறிப்பிடப்படக்கூடிய விதிவிலக்குகள், மாற்றங்கள் மற்றும் தழுவல்களுடன் இது பொருந்தும்.

இது காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது. இது இந்திய காப்பீட்டுத் துறைக்கு எதிராக இருப்பதால், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நியாயப்படுத்த முடியாதது.

மேற்கூறிய ஆட்சேபனைகளின் பார்வையில், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகவும், இந்திய அரசியலமைப்பை மீறுவதாகவும் இருப்பதால், ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories