அரசியல்

“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!

“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து பழி வாங்கி வருகிறது. அதோடு அம்மாநிலத்தில் ஏதாவது ஒரு கலவரத்தை உண்டு பண்ணவும் முயன்று வருகிறது. இதில் பாஜக பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கால் பதிக்க எண்ணி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அதற்கேல்லாம் தமிழ்நாடு மக்கள் இடம் கொடுக்கவில்லை. மக்களுக்கு இந்துக்களும், இந்துத்துவக்களுக்கும் வித்தியாசம் நன்றாக தெரிந்ததால், பாஜக -ஆர்.எஸ்.எஸ். எண்ணங்களை தோற்கடித்தனர். இந்த சூழலில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை கையிலெடுத்து கலவரம் ஏற்படுத்த முயன்ற நிலையில், அதனை தமிழ்நாடு அரசும், மக்களும் சேர்ந்து முறியடித்தனர்.

“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!

நீதிமன்றத்தையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு பாஜக செயல்படும் நிலையிலும், தமிழ்நாடு விடா முயற்சியுடன் பாஜக எண்ணத்தை முறியடித்து வருகிறது. இந்த சூழலில் திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு இந்துத்வ அமைப்புகள் அரசுக்கு எதிராக போலி பிரச்சாரம் மேற்கொள்ளும்போதிலும், மக்கள் அதனை மதிக்காமல், அரசுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த மட்டமான திட்டங்களுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை 'தென்னிந்திய அயோத்தியா'-வாக பாஜக முயல்வதாக திமுக எம்.பி கனிமொழி விமர்சித்திருந்தார்.

எனவே இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.

“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!

இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :-

"எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது."

banner

Related Stories

Related Stories